‘யானை’ வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த படம் என்றாலே வெற்றி பெறும் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹரிதாஸ்’ பட இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியிருப்பதாலும் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரித்திருக்கும் ‘சினம்’ படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் புரோமோக்கள் ஆகியவை மூலம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் சென்றடைந்திருப்பதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ‘சினம்’ வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் கூறுகையில், “’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது.
’வாகா’ படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’ தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது. த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்து மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்வார்கள்.” என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...