கோலிவுட்டில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ளது மகேந்திரா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம். சினிமா ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திரைப்பட நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழா ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மேலும், இந்நிறுவனம் முதல் திரைப்படமாக சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் ஜானரில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்துள்ளது. வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் தயாரிக்கும் இந்த படத்தை சின்ன வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறுகையில், “வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.” என்றார்.
சாய் கார்த்திக் ஜாடி கூறுகையில், “புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன. புதிய இயக்குனர் சின்னாவை பல OTT நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசை ஏற்ப இந்தப் படத்தை பெரிய படமாக உருவாக்குகிறோம். அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...