ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த டி.இமான், உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் நேரம் இல்லாமல் பிஸியாக இருந்த நிலையில், திடிரென்று குண்டான தனது உடலை ஒல்லியாக்கியது, அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவரது பாட்டுக்களை ரசிப்பதை காட்டிலும், எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் ஒல்லியானார்? என்று தான் மக்கள் யோசித்துக் கொண்டிருக்க, அவரிடம் இது குறித்து கேட்பவர்களிடம், டயட் மற்றும் உடற்பயிற்சி என்று டி.இமானும் கூறிவந்தார்.
ஆனால், உண்மையில் அவர் உடல் எடையை குறைத்தது ஒரு ஊசி தானாம். அந்த ஊசி ஒன்று போடுவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகவும். உடலில் எந்த அளவுக்கு கொழுப்பு இருக்கிறதோ, அதற்கு ஏற்ப ஒன்று முதல் ஐந்து ஊசி வரை போடுவார்களாம். உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் சக்தி படைத்த அந்த ஊசியின் மூலமாகவே டி.இமான் உடல் எடையை குறைத்தார் என்று கூறப்படுகிறது.
அந்த ஊசியை போட்டுக் கொண்டாலும் உணவு உள்ளிட்டவைகளில் ரொம்ப கட்டுப்பாடாக இருக்க வேண்டுமாம்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...