Latest News :

இங்கிலாந்தில் படமாக்கப்பட்ட வினயின் ‘மர்டர் லைவ்’!
Monday September-19 2022

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் வினய் ராய், மீண்டும் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க இங்கிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் க்ரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான ‘மர்டர் லைவ்’ என்ற படத்தில் வினய் ராய் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

பிரசாந்த் டி.மிஸாலே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். மதன் படத்தொகுப்பு செய்ய, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

 

டாட் காம் எண்டர்டெயின்மெண்ட் லிமிடேட் என்ற நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தை எம்.ஏ.முருகேஷ் இயக்குகிறார்.

 

படம் குறித்து இயக்குநர் எம்.ஏ.முருகேஷ் கூறுகையில், “ஹாலிவுட்டில் வெளியான 'ப்ளைன்ட் டேட்', 'ஸ்கை ஹை', 'டெர்மினல் எக்ஸ்போசர்', 'கிளிட்ச்', 'இன் தி கோல்ட் நைட்' ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் ஃபார் மர்டர்' என்ற ஆங்கில படத்தை தழுவி 'மர்டர் லைவ்' எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. 

 

புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும். ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை.

 

இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். 

 

ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும்.” என்றார்.

 

Murder Live

 

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகளில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

8537

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery