வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், அரங்கன் சின்னதம்பி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மஞ்சக்குருவி’. கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரபல குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இளம் காதல் ஜோடியாக விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செளந்தர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். கே.எம்.நந்தகுமார் கலையை நிர்மாணித்துள்ளார். கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்து வெகுவாக பாராட்டிய பிரபலங்கள், டிரைலர் மாஸாகவும், பாடல்கள் சூப்பர் ஹிட் ரகமாக இருப்பதாக பாராட்டினார்கள். மேலும், தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக ‘மஞ்சக்குருவி’ இருக்கும் என்பது படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது, என்று பாராட்டியவர்கள் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று பாராட்டு தெரிவித்தார்கள்.
ஒரு ராஜாளி பறவையை 'மஞ்சக்குருவி'-யாக மாற்றுவது தான் படத்தின் கதை. அண்ணன், தங்கை பாச போராட்டத்தை உயிரோட்டமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருப்பதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...