Latest News :

கட் வாங்காமல் யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘இப்படை வெல்லும்’
Wednesday October-04 2017

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் இயக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

உதய நிதிக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடிக்க, இவர்களுடன் சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அணைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்ட போது, படத்தை பார்த்தவர்கள் எந்த கட்டும் சொல்லாமல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 

விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

857

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

Recent Gallery