விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம் ‘காந்தி டாக்ஸ்’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கிஷோ பி.பெலேகர் இயக்க, ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார்.
வசனம் இல்லாதம் மெளன்ப் படமாக உருவாகும் இப்படத்தின் அறிமுக புரோமோ சமீபத்தில் வெளியானது. படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.
இப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் கூறுகையில், “மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம் என்றார். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட.” என்றார்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி.பி.ஓ ஷாரிக் படேல் கூறுகையில், “இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது.” என்றார்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து க்யூரியஸ் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் மற்றும் மூவி மில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் ‘காந்தி டாக்ஸ்’ 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...