தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாகவும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், யோகி பாபு, லட்சுமி மேனன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மலை’ படத்தை தயாரித்திருக்கும் லெமன் லீஃப் கிரியேஷன் ஆர்.கணேஷ் மூர்த்தி, யோகி பாபுவை நாயகனாக வைத்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதோடு மட்டும் இன்றி, கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் யோகி பாபு தான் எழுதியிருக்கிறார். இதில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார்.
‘தா’, ‘வில் அம்பு’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்கும் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.
’மலை’ படத்தை தொடர்ந்து யோகி பாபுவை வைத்து இரண்டாவது படம் தயாரித்து வரும் லெமன்லீஃப் கிரியேஷன், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...