நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியிருப்பது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், “எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன” என இயக்குநர் விக்னேஷ் சிவன், நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நயன்தாராவும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
அதோடு இரண்டு குழந்தைகளின் பாதங்கள் அவற்றிற்கு நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இதற்காக, அவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், திருமணமாகி நான்கே மாதங்களில் குழந்தை பிறந்தது எப்படி? எனப்பலரும் கேட்டுக் கொண்டிருக்க, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...