Latest News :

சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ தமிழில் வெளியாகிறது
Tuesday October-11 2022

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ’காட்பாதர்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது.  சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

 

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி ரூபாய் வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

ஆந்திரா தெலுங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ஆம் தேதி தமிழகத்திலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

 

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படத்தை தான் ’காட்பாதர்’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 

 

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related News

8587

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery