ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படம் ‘வீரன்’. தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது.
திரையரங்க வெளியீடு மற்றும் ஒடிடி என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது. அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த 'சிவக்குமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவு' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி-ஹிப்ஹாப் தழிழா இணைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக 'வீரன்' அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலையை நிர்மாணித்துள்ளார். மகேஷ் மாத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தற்போது படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை, டீசர், டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...