தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இதனால், காமெடி நடிகர் மற்றும் கதாநாயகன் என்று இரண்டிலும் பிஸியாக வலம் வருபவர், ரஜினி, விஜய் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் யோகி பாபு, கடலூரில் நடைபெற்று வரும் ஜெயிலர் படப்பிடிப்புக்கு போகாமல் டிமிக்கு கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ரஜினிகாந்தின் படப்பிடிப்பில் பங்கேற்காததற்கு நடன இயக்குநர் ஒருவர் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
பிரபல நடன இயக்குநர் தினேஷ், கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இந்த படத்தை டிஸ்கவர் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்திருக்கும் யோகி பாபு, டப்பிங் பணிகளை விரைவாகவும் முடித்துக்கொடுத்திருக்கிறாராம். இதற்காக, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு நாள் போகாமல், அவர்களிடம் உரிய அனுமதி கேட்டு, ‘லோக்கல் சரக்கு’ படத்தின் டப்பிங் பணியை முடித்துக்கொடுத்தாராம்.
ரஜினிகாந்த் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பவர்கள் அப்படத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள், ஆனால் யோகி பாபு மிக நேர்மையாக சிறிய படம் என்றாலும், ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக்கொடுத்தார், என்று அப்படக்குழுவினர் பெருமையாக பேசி வருகிறார்கள்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...