Latest News :

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும் - இயக்குநர் நம்பிக்கை
Friday October-14 2022

காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது ‘காலங்களில் அவள் வசந்தம்’. அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கும் இப்படத்தை அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

 

அறிமுக நடிகர் கெளஷிக் ராம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் நாயகியாக நடிக்க, ஹெரோஷினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் வர்கீஸ் மேத்தியூ, ஆர்ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைத்திருக்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், திரை பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், “இயக்குநரை எனக்கு 10 வருடமாக தெரியும் அட்டகத்தி நேரத்தில் என்னிடம் இந்த கதை சொன்னார். அவரிடம் இந்த கதையை படமெடுக்கலாம் என பேசிக்கொண்டிருந்தோம். மிக அழகான காதல் கதை இது. இந்தக் கால இளைஞர்கள் பற்றிய கதை. அனைவரும் படத்தில் அருமையாக செய்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “சி.வி.குமார் சார் கதை தேர்வு செய்வதும் தயாரிப்பில் ஈடுபடுவதும் ஆச்சர்யம் தரும். அவர் புதுமுகங்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழு மிக அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அருமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் ராம்குமார் பேசுகையில், “ சி.வி.குமார் ஒரு படத்தில் சம்பந்தப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அந்தப்படம், கதை வித்தியாசமாக இருக்கும். இந்தப்படமும் பார்க்க அழகாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “ சி.வி.குமார் இருப்பதால் கதைக்களம் நன்றாக இருக்கும். காலங்களில் அவள் வசந்தம் டைட்டிலே நன்றாக இருக்கிறது. இன்று தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது. தம்பி விஷ்வா இப்படத்தில் பங்குபெற்றுள்ளார். நாயகன் அழகாக இருக்கிறார். நாம் இருந்த இடத்தை மறக்க கூடாது, அதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் கௌரவ் பேசுகையில், “சி.வி.குமார் ஒரு விஷயத்தில் கை வைக்கிறார் என்றாலே அது பற்றி அனைத்தையும் அலசி விடுவார். லவ் படத்தில் நாயகன் நாயகி அழகாக இருக்க வேண்டும். இப்படத்தில் இருவரும் அழகாக இருக்கிறார்கள். டைட்டிலே பாஸிட்டிவாக நன்றாக இருக்கிறது. படம் அனைவருக்கும் வசந்தம் தரும், வாழ்த்துகள். ” என்றார்.

 

நாயகி அஞ்சலி நாயர் பேசுகையில், “இந்தப்படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ராதே கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஹரி மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. கௌஷிக், ஹெரோஷினி எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நாயகி ஹெரோஷினி பேசுகையில், “என் டீமுக்கு முதல் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் மிக அழகாக வந்துள்ளது. நாங்கள் அனைவரும் இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. விரைவில் உங்களை திரையில் சந்திக்கிறோம் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், “என் அப்பா அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக நன்றி அவர்கள் சப்போர்டில் தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல் சொல்லி துவங்குவது போல் தான் இந்தப்படத்தை துவங்கியுள்ளேன். அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. இந்தப்படத்தில் ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். இந்தப்படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம் மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் கௌஷிக் பேசுகையில், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சின்ன வயதிலிருந்தே எனக்கு பொழுதுபோக்கு துறை மீது அதிகம் விருப்பம் இருந்தது. என் குடும்பம் எனக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி. இயக்குநரின் 15 வருட கனவு இந்தப்படம். இந்தக்கனவை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.” என்றார்.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

Related News

8594

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery