Latest News :

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 107 வது திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு!
Monday October-17 2022

வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'NBK 107' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆர் எஃப் சியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 21ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலகிருஷ்ணா மற்றும் கோபிசந்த் மலினேனி ஆகிய இருவரின் படத்திலும் சூப்பர் ஹிட்டான பாடல்களை வழங்கிய இசையமைப்பாளர் எஸ். தமன், இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை ராம் - லக்ஷ்மன் அமைக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ எஸ் பிரகாசும், நிர்வாக தயாரிப்பாளராக சந்து ரவிபதியும் பணியாற்றுகிறார்கள்.

 

இந்த படத்தின் தலைப்பு குறித்து இணையத்தளங்களில் சில தலைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் படக்குழுவினர் உறுதி செய்த தலைப்பு இன்னும் ஐந்து நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்பதால், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அசலான டைட்டிலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Related News

8598

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery