நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுஇனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசு பொருட்களுக்காக, நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். ‘விருமன்’ படம் வெற்றியைடைந்ததை தொடர்ந்து அவர் இந்த தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அன்பு பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. சூர்யாவின் ரூ.10 லட்சம் நன்கொடை மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ரூ.2.50 லட்சத்தை பெற்று இந்த ஆண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 1002 உறுப்பினர்களுக்கு அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி அவித்து கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு நேற்று காலை, நடிகர் சங்க வளாகத்தில் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஐ.கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ், ஏ.எம்.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கினார்கள்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...