தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் இன்னோவேடிவ் பிலிம் இண்டர்நேஷ்னல் இணைந்து சமீபத்தில் நடத்திய குறும்பட போட்டியில் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த 25 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று தான் ’ஒருநாள்’ என்ற குறும்ப்டம்.
அருண் எழுதி இயக்கிய ‘ஒருநாள்’ குறும்படத்தில் லயோலா கல்லூரி மாணவர் யஷ்வந்த் மற்றும் நடனக் கலைஞர் தீபிகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெருமாள் மற்றும் அம்மு முத்து ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்திற்கு அர்ஜுன் இசையமைத்துள்ளார். சிவா படத்தொகுப்பு செய்ய, செந்தில் ஒலிக்கலவை செய்துள்ளார்.
இந்த குறும்படத்தை பார்த்த கலைஞர்களும், சிறப்பு விருந்தினர்களும் தங்களது கைத்தட்டல்கள் மூலம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, நடிகர்களின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த நிலையில், இந்த குறும்படத்தை பார்த்த இயக்குநர் மற்றும் எடிட்டர் பி.லெனின், சிலாகித்து பாராட்டியதுடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் நடத்திவரும் BOFTA அகாடமியில் இந்த குறும்படத்தை திரையிட்டு மாணவர்களைப் பார்க்க வழிவகை செய்தார்.
மேலும், இயக்குநர் அருண் வெள்ளித்திரையில் படம் இயக்குவதற்காக அவருக்கு சில தயாரிப்பாளர்களையும் இயக்குநர் லெனின் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...