சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் ராக்ஸ்டார் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், ரயிலுக்குள் நுழைந்ததும் ரசிகர்களின் கண்களைக் கவரும் வகையில், உள்ளேயும் அனிருத் இசை நிகழ்வு குறித்த படங்கள் அவர்களை வரவேற்றன. இந்த விளம்பரங்களை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அந்த ரயிலில் பயணித்த ரசிகர்கள் புன்னகையுடன் தங்கள் கைப்பேசிகளில் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' இசை நிகழ்ச்சியின் விளம்பரங்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டாடினர்.
சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் “டிப்பம் டப்பம்“ பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. கார் ஹாரன் ஒலியில் இசைக்கப்பட்ட பாடலைக் கேட்டு அங்கு வந்திருந்த ரசிகர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைத்து பார்வையாளர்கள் பாடியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.
'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் இந்நிகழ்ச்சியின் நேரலையில் பங்குகொள்ளும் அற்புத வாய்ப்பும், கொண்டாட்டமும் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...