நடிகர்கள், இயக்குநர்களை தாண்டி குறிப்பிட்ட சில தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அந்த வரிசையில், அக்சஸ் பிலிம் பேக்டரியின் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் என்றாலே திரையுலகினர் மத்தியில் மட்டும் இன்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவதுண்டு. காரனம், ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வருவதோடு வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தயாரித்து வருகிறது அக்சஸ் பிலிம் கேப்டரி.
தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக உருவாகியிருக்கும் படம் ‘மிரள்’. வழக்கம் போல் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ள ‘மிரள்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பரத் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், வழக்கமான திகில் படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக உருவாகியிருப்பதோடு, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை திகிலின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகள் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மிரள்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி பெற்றுள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...