பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார்.
:மைக்கேல்' படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
'மைக்கேல்' படத்தின் டீசரில், '‘மைக்கேல்! வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு,, “ துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர் ” என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி... ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் 'மைக்கேல்' திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.
இந்தப் படத்தின் டீசரில் ஒரு குழந்தையின் கால்கள், அதன் உருவப்படம் மற்றும் ஒரு தெய்வம் போன்ற சில மர்மமான விசயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. சந்தீப் கிஷன் தன்னுடைய கட்டுடலை காட்டி ஆக்சன் அதிரடி நாயகன் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தி அதகளப்படுத்துகிறார்.
படத்தின் காதல் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளைப் போல் சுவராசியமாக இருக்கிறது. இந்த டீசரில் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை திவ்யான்ஷா கௌஷிக் இடையேயான உதட்டுடன் உதடு பொருத்திய முத்தக் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. 'மக்கள் செல்வன்: விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றம் ஆகியவையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.
'மைக்கேல்' படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...