தமிழ் சினிமாவில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், பத்திரிகை உலகின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. சினிமா பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் துணையாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுவதோடு, சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ’தீபாவளி மலர் 2022’ அக்டோபர் 23 ஆம் தேதி, பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, எழுத்தாளர்கள் சங்க தலைவர், திரைக்கதை ஜாம்பவான் இயக்குநர் கே.பாக்யராஜ், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் கலா பிரபு ஆகியோரால் வெளியிடப்பட்டது.
பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் ‘தீபாவளி மலர் 2022’ புத்தகத்தை வெளியிட அவரது மகனும் பிரபல இயக்குநருமான கலா பிரபு பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வை தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், திரைக்கதை ஜாம்பவான், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்ட கே.பாக்யராஜ் வெளியிட சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், பொருளாளர் ஏ.மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத் தலைவர்கள் ‘கலைமாமணி’ மணவை பொன்மாணிக்கம், ‘கலக்கல் சினிமா’ இ.சுகுமார், இணைச் செயலாளர் ‘சினிமா இன்பாக்ஸ்’ ஜெ.சுகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ’குறள் டிவி’ மோகன், ‘இளஞ்சூரியன்’ ஏ.ஹேமலதா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டார்கள்.
மேலும், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தேசிய விருது இசையமைப்பாளரும், தித்திக்கும் மொலோடி பாடல்களை தொடர்ந்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் டி.இமான், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட, சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டார்கள்.
மூன்று பிரபலங்கள் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் 2022-ல் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கும் 'ப்ரின்ஸ்', 'சர்தார்' பட விளம்பரங்கள், அறிமுக நாயகன் இஷானின் வாழ்த்து விளம்பரம் மற்றும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ நிறுவன தீபாவளி வாழ்த்து விளம்பரம் ஆகியவை மலரின் முன் அட்டை ,பின் அட்டை , உள் அட்டைகளை அலங்கறிக்க, மூத்த பத்திரிகையாளர்களின் அனுபவங்கள், எழுத்தாளர்களின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிஞர்களின் கவிதைகள் மற்றும் தற்போதைய இளைய தலைமுறை பத்திரிகையாளர்களின் கட்டுரைகள், பிரபலங்கள் இதுவரை சொல்லாத பல சுவாரஸ்ய தகவல்கள் என மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வகையில் மலர்ந்துள்ளது சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ‘தீபாவளி மலர் 2022.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...