Latest News :

கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது ஏன்? - மனம் திறந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்
Wednesday October-26 2022

சோசியல் மீடியாவில் திரை பிரபலங்கள் பலர் ஆக்டிவாக இருப்பதோடு அவ்வபோது தங்களது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் அதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பதும் அதிகரித்து வருவதால், பல நடிகைகள் இதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

 

நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அடங்கப்பா...கவர்ச்சியாக இருப்பதால், அதை பார்க்கும் ரசிகர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதும் உண்டு.

 

அப்படி ஒரு பலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு காரணம் சினிமா வாய்ப்பு தான் என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முதல் முறையாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது குறித்து நடிகை சாக்‌ஷி அகர்வால் மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால், “பட வாய்ப்பிற்காக பதிவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.'' என பதிலளித்தார்.

 

மேலும், தற்போது தான் பணியாற்றி வரும் படங்கள் குறித்து கூறிய சாக்‌ஷி அகர்வால், “பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் 'பஹிரா' மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் 'நான் கடவுள் இல்லை' என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். 'கெஸ்ட் - சாப்டர் 2' எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து 'கந்தகோட்டை' படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.'' என்றார்.

 

தொடர்ந்து எம்மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, '' கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.'' என்றார்.

 

தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சியின் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். 

 

முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வருவதோடு, கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால், நடிப்பிற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சர்வதேச புகழ்பெற்ற நடிப்பு பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர் என்பதும், சில ஹாலிவுட் குறும்படங்களில் நடித்து விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8618

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery