Latest News :

அருண் விஜய் படத்திற்காக 2.5 ஏக்கரில் போடப்படும் லண்டன் சிறைச்சாலை செட்!
Saturday October-29 2022

இயக்குநர் விஜய் இயக்கத்த்ஹில், அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படம் ‘அச்சம் என்பது இல்லயே’. இப்படத்தில் நாயகியாக நிமிஷா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எமி ஜாக்சன் இப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகிறார்.

 

இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார்.   பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற  இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார். 

 

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பின்னி மில்ஸ் பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.5 கோடி செலவில் பிரமாண்டமான லண்டன் சிறைச்சலை செட் அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் சரவணனின் கைவண்ணத்தில், ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. 

 

முன்பே திட்டமிட்டபடி படப்பிடிப்பு மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர். அதைப் போலவே 'அச்சம் என்பது இல்லயே' படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும். 

 

ஜிவி பிரகாஷ்  குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் எம்.ராஜசேக்கர் மற்றும் எஸ்.ஸ்வாதி தயாரிக்கும் இப்படத்தின் இணைத்தயாரிப்பாளர்களாக சூர்ய வம்சி, பிரசாத் கோதா, ஜீவன் கோதா ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

Related News

8624

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery