எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் ‘துணிவு’. பேவீவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், ஜான் கொக்கேன், வெற்றி கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசலையில் நடைபெற்றது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல் வெளியானதால் மக்கள் கூட்டம் குவிந்தது. பிறகு அஜித்திற்கு பதில் வேறு ஒருவர் டூப் போட்டு படப்பிடிப்பில் பங்கேற உண்மை தெரிய வந்தது.
படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள உள்ள நிலையில், பின்னணி வேலைகளை வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், படத்தை பொங்கல் வெளியீடாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ‘துணிவு’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘விக்ரம்’ உள்ளிட்ட மிகப்பெரிய வசூல் திரைப்படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ‘துணிவு’ படத்தை வெளியிட இருப்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...