ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் பிரஷாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ முக்கியமானது. நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கி தயாரித்து வரும் இப்படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட காட்சிக்காக ராக் ஸ்டார் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி குரலில் “டோரா புஜ்ஜி...” என்ற பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோருடன் 50 நடன கலைஞர்களை ஆட வைத்து இப்பாடலை படமாக்க முடிவு செய்துள்ள தியாகராஜன், பிரமாண்ட அரங்கம் ஒன்றையும் அமைத்துள்ளார்.
இந்த நிலையில், ”டோரா புஜ்ஜி...” பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைக்க இருக்கிறாராம். இந்த தகவல் வெளியான உடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, பிரஷாந்தின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட உடன் ‘அந்தகன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் முடிவு செய்துள்ளார்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு ‘அந்தகன்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ள வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...