தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்க்கு தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்றால் ஏதோ படம் வெளியாகும் போது போஸ்டர் ஒட்டுவது, முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கொண்டாடுவது என்று இல்லாமல், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதோடு, பல சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் செய்யும் சமூக பணிகளும், அவர்கள் பற்றியும் அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால், வெளிநாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள், ஒரு இயக்கமாக மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கனடா நாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் என்றால், அது மிகையல்ல. ஏராளமான பல சமூக பணிகளை செய்து வரும் அவர்கள் சமீபத்தில் செய்த ஒரு சேவை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கனடா நாட்டில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருவதோடு, கனடா தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடா தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களின் மருமகன் கார்த்திக்.
கார்த்திக் உள்ளிட்ட கனடா தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர், தங்களது இயக்கம் சார்பாக அந்நாட்டில் பல ஆக்கப்பூர்வமான பணிகளையும், மக்களுக்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவில் தேசிய இரத்த தானம் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த தினத்தில், கனடா தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கனடாவின் பர்லிங்டன்னில் உள்ள கனடா இரத்த சேவைகள் (Canadian Blood Services ) முகாமில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
விஜய் ரசிகர்களின் இத்தகைய சமூக சேவையை அந்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டும் இன்றி அந்நாட்டை சேர்ந்தவர்களும் வெகுவாக பாராட்டி வருவதால், நடிகர் விஜயின் வாழ்த்துகளோடு இதுபோன்ற சமூக பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றும் கனடா தலமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள கார்த்திக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விஜயை ஒரு நடிகராக கொண்டாடுவது மட்டும் இன்றி, அவரது வாழ்த்துகளோடு பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் கனடா தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர், தங்களது பணிகளை ஒருங்கிணைக்கவும், தங்கள் இயக்கத்தினரை ஒருங்கினைக்கவும், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
கனடா தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கும் இந்த சமூக வலைதளப்பங்களின் லிங் இதோ:
https://twitter.com/TVMIoffl/status/1587137293084917760?t=MGl3ssT4sZCRh6GD0Nnrpw&s=19
https://www.instagram.com/p/CkYwRHsv0gD/?igshid=YmMyMTA2M2Y%3D
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...