நடிகர், வசனம் மற்றும் திரைக்கதையாசிரியராக வலம் வரும் மணிகண்டன் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் தனது வசனம் மூலம் கவனம் ஈர்த்ததோடு, ‘காலா’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் நடிகராக கவனம் பெற்றார். இதையடுத்து ‘ஜெய் பீம்’ படத்தில் முக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றவர், நடிகராக பல விருதுகளையும் வாங்கினார்.
இந்த நிலையில், மணிகண்டன் முதல் முறையாக சோலோ ஹீரோவாக களம் இறங்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மீதா ரகுநாத் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.
இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் 'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...