தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது திருமண தேதி மற்றும் வருங்கால கணவர் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானி, தனது குடும்ப நண்பரான மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற உள்ளது.
தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹன்சிகா மோத்வானியின் 11-வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகிறார்களாம்.
திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார். ஒவ்வொரு தொழிலும் மதிப்பு மிக்கது என்பதை உறுதியாக நம்பும் ஹன்சிகா நிச்சயம் திருமணம் எந்தவொரு தொழிலுக்கும் தடையாக இருக்காது என்கிறார்.
தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் தலைப்பிடப்படாத படங்கள், இயக்குநர்கள் இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் சில நாட்களை ஹன்சிகா ஒதுக்கியுள்ளாராம்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...