பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மனோஜ் எஸ்.சாமுவேல் காட்சன் மற்றும் ஜே.கே.எம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ’D3’. பாலாஜி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரஜின் நாயகனாக நடித்திருக்கிறார்.
மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். ஜெயசீலன் கலையை நிர்மாணிக்க, ராம்போ விமல் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் பிரஜின் பேசுகையில், “நான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறேன் 19 ஆண்டுகளாக இந்த ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை, பாதியில் நின்று போனதில்லை. நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான்.தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை. இது ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கதை கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன்.
படம் பண்ணுவதை விட இன்று அதை விளம்பரப்படுத்துவது சிரமமாக உள்ளது. நாங்கள் முடிந்தவரை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதற்குப் பலரும் ஒத்துழைத்தார்கள். இந்தப் படத்தின் போஸ்டர்கள் பேசப்பட்டன.என் சினிமா, தொலைக்காட்சி அனுபவங்களில் இந்தப் படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. நிறைய நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் நன்றாக ஒத்துழைத்தனர். விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. இருக்கிற நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. எனவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். முடிந்தவரை உழைத்திருக்கிறேன் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்.” என்றார்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், “இது ஒரே நாளில் நடக்கும் கதை.இந்தப் படத்தின் வரிசையில் D2, D1 படங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது.சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே மனித உழைப்பைக் கடுமையாகக் கொடுக்க வேண்டி இருக்கும். இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். படப்பிடிப்பு நாட்களில் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் கூட படப்பிடிப்பு நடந்தது. அந்த அளவிற்கு உழைத்தோம் .பிரஜின் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஆதரவும் உழைப்பும் அளவிட முடியாதது.இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் சாமுக்கு மிகப்பெரிய நன்றி.சினிமாவில் யாரும் எளிதாக மேலே வர முடியாது. பிரஜின் போன்ற உழைப்பாளிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. அவருக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.இந்தப் படம் பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் கடந்து தான் உருவாகி இருக்கிறது.
இந்தப் படப்பிடிப்பின் போது கோவிட் காலத்தில் ஒருவர் இறந்து விட்டார்.இப்படி ஆயிரம் தடைகள் கடந்த பிறகு தான் இங்கு வந்து நிற்கிறோம். இன்று இந்த விழா நடக்கிறது. ஆனால் நேற்று வரை பிரச்சினை இருந்தது. இந்தப் படம் நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினை பற்றிச் சொல்கிறது. இந்த படத்தைப் பார்த்தால் வெளியே யாரிடமும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்க கூட யோசிக்கிற நிலை வரும். இது திகில் படம் காலம் என்கிறார்கள். ஆனால் யாரும் வேண்டுமென்றே அப்படி எடுப்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் இந்த வகை படங்கள் தான் எடுக்க முடியும். அதனால் தான் இதை நான் எடுத்திருக்கிறேன். இது ஒரே இரவில் எழுதிய கதை என்று சொல்லலாம். பீமாஸ் கிரிக்கெட் கிளப் என்று இருந்த நண்பர்கள் குழு தயாரிப்பு நிறுவனமாகி உள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றி ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.இப்படத்தை வெளியிட உதவிய ஜெனிஸ் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.
நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் பேசுகையில், “இந்த விழாவுக்கு என்னை சாம், மோகன் ராஜ் அழைத்தார்கள். எனக்கு இப்போது இவர்களையெல்லாம் பார்க்கும்போது, சென்னை 28 பட அனுபவம் ஞாபகம் வருகிறது. அது முழுக்க முழுக்க நண்பர்களைப் பற்றியது. நண்பர்களின் கூட்டணியால் வெற்றி பெற்றது. அதேபோல் இங்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. நான் அரசியல் பணிக்குச் சென்று விட்டதால் சினிமாவில் சற்று இடைவெளி வந்தது போல் உள்ளது.
அப்பா விட்டுச் சென்ற அரசியல் பணியையும் தொழிலையும் நான் செய்து வருகிறேன். நான் எல்லாவற்றிலும் முழு முயற்சியோடு இருப்பேன். எந்த வேலையிலும் ரசித்துச் செய்தால் வெற்றி உண்டு.உண்மையாக உழைத்தால் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஜெயிக்கலாம். முழு மனதுடன் எதையும் செய்ய வேண்டும். அப்படி மக்களுக்குச் சேவை செய்யவே நான் அரசியலில் இருக்கிறேன். இந்தச் சினிமா விழாவில் சிலகால இடைவெளிக்குப் பின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். D3 படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
படத்தின் இசை அமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா பேசுகையில், “இதுவரை காதல் கதைகளுக்கே இசையமைத்துக் கொண்டு இருந்தேன்.அந்தப் படங்களுக்கு நிறைய பாடல்கள் செய்திருக்கிறேன். வேறு வகையான படங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போதுதான் பாலாஜி,தன் படத்துக்கு எடுத்திருந்த சில காட்சிகளைக் காட்டினார். எனக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு வித்தியாசமான வாய்ப்பு என்பதைப்புரிந்து கொண்டு இதில் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன்.” என்றார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...