கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயந்தராவுக்கு தற்போதும் பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயந்தாரா நடித்து வருகிறார்.
சிம்பு, பிரபு தேவா என்று இரண்டு முறை காதலி விழுந்த நயந்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். மேலும் கடந்த மாதம் தனது காதலரின் பிறந்தநாளை நியார்க்கில் கொண்டாடிய நயந்தாரா, அங்கு அவருக்கு அன்பு பரிசையும் கொடுத்தாராம்.
என்னதான் காதலரை மாற்றினாலும், முன்னாள் காதலரின் அடையாளமாக தனது கையில் குத்தப்பட்ட டாட்டூவை மட்டும் மாற்ற முடியாமல் திணறிய நயந்தாரா, ஒரு வழியாக அதையும் மாற்றிவிட்டார்.
ஆம், பிரபு தேவாவை காதலிக்கும் போது 'Pரபு' என தனது கையில் டாட்டூ குத்தியிருந்தா. பிரபு தேவா உடனான காதல் முறிந்த பிறகும் அந்த டாட்டூவ அவரால் மாற்ற முடியவில்லை. ஏன், விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகும் அந்த டாட்டூ அவரது கையில் அப்படியே தான் இருந்தது. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், தனது கையில் இருந்த 'Pரபு' என்ற டாட்டூவை Positivity என்று நயந்தாரா மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் தான் டாட்டூ மாற்றியதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். நயனின் புதிய டாட்டூ புகைப்படும் படு வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...