தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படத்தை தொடர்ந்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கியவர், தற்போது தனது மூன்றாவது படத்தை இயக்க தயராகிவிட்டார்.
‘லால் சலாம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்த லைகா புரொடக்ஷன்ஸ் முதன்மை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...