தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனமான கவிதாலயா, டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க, நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இவர்களுடன் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோநாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை ‘நாளை’, ‘சக்கர வியூகம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘ஃபேமிலி மேன் 2’ ,’ஆஃபிஸ்’ உள்ளிட்ட தொடர்கள் மற்றும் பல வெற்றிப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவருமான உதய் மகேஷ் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே.பாலச்சந்தர் இயக்கிய ’சாந்தி நிலையம்’ மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகிறது.
ஹிருதயம் உள்ளிட்ட பல மலையாள வெற்றிப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு.கே.வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். ஷிவா யாதவ் கலை வடிவமைப்பு பணிகளை கவனிக்க, பார்வதி மீரா பாடல்கள்எழுதியுள்ளார். சண்டை பயிற்சி பணிகளை ஜி.என்.முருகன் கையாள்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...