அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை சுமார் ரூ.132 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. இநிநிறுவனம் தயாரித்த படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். மேலும், இந்நிறுவனத்தின் 100 வது படம் இது.
இதற்கிடையே, ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர் ஏற்கனவே ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரித்து வருவதாகவும், தற்போது ‘மெர்சல்’ என்ற தலைப்பில் விஜய் நடித்தால், தன்னால் தொடர்ந்து, தனது படத்தை தயாரிக்க முடியாது, என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்த கூடாது என்று ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கபப்ட்டிருப்பதாலும், மெர்சல் என்ற தலைப்பில் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாலும், மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்தவில்லை என்றால் பெரிய நஷ்ட்டம் ஏற்படும், எனவே மெர்சல் தலைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இன்று மீண்டும் ‘மெர்சல்’ தலைப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரையும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதோடு, ‘மெர்சல்’ என்ற தலைப்பின் மீதான தடை தொடரும் என்றும் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று மெர்சல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது டைடில் பிரச்சினையும் முடிவுக்கு வராததால் விஜய் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...