காதல் படங்கள் எத்தனை தான் வந்தாலும், அதை வித்தியாசமாக சொல்லும் அத்தனை படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று பெரிய வெறுவதுண்டு. அதற்கு சான்று சமீபத்தில் புதுமுகங்களின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’. அந்த வகையில், மற்றொரு வித்தியாசமான அதே சமயம் புதுமையான காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘என்னை மாற்றும் காதலே’.
புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அலி, துளசி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா சாமிநாதன், டேனியல் வாசுதேவன், கிருஷ்ணவேணி, நாராயணராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
கோமலி வழங்க ஆர்.ஆர்.கிரியேட்டிவ் கமர்ஷியல் நிறுவனம் சார்பில் என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி ஜலபதி.பி இயக்கியிருக்கிறார்.
சதீஷ் வசனம் எழுத, ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். மோகன்ராஜன், முத்தமிழ்செல்வன், ரதன் ஆகியோர் பாடல்கள் எழுத, கல்யாண்.பி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜெ.சிவகிரண் படத்தொகுப்பு செய்ய, கோபி.பி நடனம் அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகளை சபா வடிவமைக்க, சந்திரமெளலி கலைத்துறையை கவனித்துள்ளார். ஹசரத்பாபு மற்றும் சீனிவாசராஜு தயாரிப்பு மேற்பார்வையாளர்களாக பணியாற்றியுள்ளார்கள். விஜய முரளி மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
படம் பற்றி இயக்குநர் ஜலபதி.பி கூறுகையில், “கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக பட்டணம் வருகிறான் நாயன்.அங்கு நாயகியை பார்க்கிறான். அவளை விடாமல் துரத்தி காதலை வெளிப்படுத்த துடிக்கிறான். அவளோ தனக்கு நிறைய லட்சியங்கள் இருப்பதாக கூறி அவன் காதலை நிராகரிக்கிறாள். இதனால் நாயகன் எடுக்கும் முடிவினால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறாள் நாயகி. அதன்பிறகு நடைபெறும் திடுக்கிடும்" சம்பவங்கள் அவளை எப்படி பாதித்தது? அதிலிருந்து அவள் மீண்டாளா? மாட்டினாளா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல , காதலிக்க நினைப்பவர்களுக்கும், காதலிக்காமல் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம்பிடிக்கும்.” என்றார்.
’என்னை மாற்றும் காதலே’ திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பும், திரை பிரபலங்களிடம் பாராட்டும் பெற்று வ்ருகிறது. தற்போது பின்னணி வேலைகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.
‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’...
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...