கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், டாக்டர் ஐசரி கே.கணேஷ், தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் 50 நாட்களை கடந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக 50வது நாள் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்வில் ‘வெந்து தணிந்தது காடு’ படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், “இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் சார் உடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.” என்றார்.
நடிகர் நடிகர் சரத்குமார் பேசுகையில், “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ ஆர் ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
நடிகை ராதிகா பேசுகையில், “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது. சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும், எனது வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர். அவர்களது கடின உழைப்பில் இந்த படம் சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம், அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தை முதலில் நான் தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக்கொண்டதால் நான் இந்த படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின் படி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக நான் ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், “இந்த படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிப்பதற்காக தான் இந்த விழா. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வாங்கியவுடன் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்பு தான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...