மனோஜ் பீதா இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. லேபிரிந்த் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனிஷ்காந்த், புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் மனோஜ் பீதா கூறுகையில், “தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் மறு ஆக்கம் தான் இந்த ’ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்.
அந்த தெலுங்கு படத்தின் உரிமை என்னிடம் இருந்தது அதை கேள்விப்பட்ட சந்தானம் சார் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை. காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று சந்தானம் சாரிடம் சொன்னேன். அதன் பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம்.
இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார். இது ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். அதில் அந்த மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை நான் கட்டமைத்துள்ளேன்.
கதாநாயகி ரியா சுமன், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், புகழ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. வரும் 25ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. என்னுடைய முதல் படமான ’வஞ்சகர் உலகம்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இந்த படத்திற்கும் தர வேண்டும்.” என்றார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...