Latest News :

’கலகத் தலைவன்’ நிச்சயம் வெற்றி பெறும் - நடிகர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
Saturday November-12 2022

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் கலையரசன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “இயக்குநர் மகிழ் திருமேனி பேசுகையில், “படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.  கலையரசன், ஆரவ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். உதயநிதி சார் எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த உதயநிதி அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள்.  மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குநர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

நடிகர் கலையரசன் பேசுகையில், “நான் சின்ன பாத்திரத்தில்  தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குநர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார்.” என்றார்.

 

நடிகை நிதி அகர்வால் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கும் நன்றி. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.” என்றார்.

 

நடிகர் ஆரவ் பேசுகையில், “ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு இந்த படத்திற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசை ஈர்க்கும் படி அமைந்துள்ளது. இயக்குநர் மகிழ் உடைய ரசிகனாக இருந்த எனக்கு வாய்ப்பளித்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி. அவரிடம் நிறைய கற்று கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை இந்தப் படத்தில் முழுவதுமாய் அவர் தான் மெருகேற்றியுள்ளார். அடுத்தாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த உதயநிதி சாருக்கு நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், “இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய  நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். இயக்குநர் மகிழ் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது, நிறைய கற்றுக்கொண்டேன். படம் வெற்றியடைய உங்கள் ஆதரவு தேவை. நன்றி” என்றார்.

 

பாடலாசிரியர் கார்கி பேசுகையில், “இயக்குநர் மகிழ் எனது மிகச்சிறந்த நண்பர். அவர் படங்களில் பாடல் எழுதுவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். அவர் பாடலுக்கு தரும் தருணங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் பாடல் எழுதிய அதே நாளில் தமிழக அரசுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பெறும் பாடல் ஒன்றையும் எழுதினேன். அப்பாவிற்கும் மகனுக்கும் ஒரே நாளில் பாடல் எழுதிய பெருமை கிடைத்தது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கு இது திருப்புமுனை படமாக இருக்கும். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் தில் ராஜு பேசுகையில், “ரெட் ஜெயன்ட், உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி உடன் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய பாணியை மாற்றி, இதில் பணியாற்ற வைத்த இயக்குனருக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் பாபி சிம்ஹா பேசுகையில், “படத்தின் விஷுவல்ஸ் மிகவும் ஆழமாக இருக்கிறது. காட்சிகளை பார்க்கும் போது உதயநிதி சார் ஸ்டைலாக இருக்கிறார். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “லவ்  டுடே படத்தின் வெற்றிக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.  இந்த படத்தின்  டிரெய்லர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ் திருமேனி சாருடைய படத்திற்கு நான் எப்பொழுதும் ரசிகன். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

 

Director Magish Thirumeni

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் மகிழ் திருமேனி உடைய திரைப்படங்கள் எப்போதும்  ஆழமான கதையுடன் இருக்கும். கதாபாத்திரங்களில் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். அவரது படத்தின் காதல் காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன். உதயநிதி சார் உடன் பயணித்த அனுபவம், எனக்கு முக்கியமான அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகள்.  இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “உதய் அண்ணா தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து வருகிறார். அதற்கு எனது வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குனர் சுந்தர் சி பேசுகையில், “இயக்குநர் மகிழ் திருமேனி உடைய  திரைக்கதைக்கு நான் பெரிய ரசிகன். அவரது தடம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதய் சார் உடன் பணியாற்ற முயற்சித்து இருக்கிறேன்,  ஆனால் அது நடைபெறவில்லை. அவருடைய திரைப்பயணத்துக்கு எனது வாழ்த்துகள், அவர் தொடர்ந்து சினிமாவிற்கு பல நன்மைகளை செய்து வருகிறார். இந்த படம்  மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இயக்குநர் மகிழ் திருமேனி உடைய எழுத்துக்கு நான் எப்பொழுதும் ரசிகன். அவர் நிறைய நுணுக்கங்களை படத்தில் சேர்ப்பார். இந்தப் படம் கண்டிப்பாக அவருடைய அர்பணிப்புக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். உதயநிதி சாருக்கு இந்த படம் புது பரிணாமமாக இருக்கும். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர்ர் அருண் ராஜா காமராஜ் பேசுகையில், “படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இந்த கலகத் தலைவன், நிறைய கலகத்தை உருவாக்கி, அதை தீர்க்கும் தலைவனாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “இந்த படத்தின் டிரெய்லர் ஒரு நல்ல படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. உதயநிதி சார் உடைய திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக அமைய எனது வாழ்த்துக்கள். படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குனர் எம்.ராஜேஷ் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்கள் செய்வார் என நினைத்தேன், தற்போது நிறைய சீரியஸான படங்களை செய்து கொண்டு இருக்கிறார்.  இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது அட்டகாசமாக  இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி பேசுகையில், “திரைக்கதைக்கு மகிழ் திருமேனி கொடுக்கும் ஆழமான தகவல்கள் தான் அவரது பலம். அது இந்த படத்திலும் இருக்கிறது. உதயநிதி அவர்களுக்கு சினிமா மேல் அதிக பற்றுள்ளது. அவர் சினிமாவிற்கு பல நன்மைகளை செய்துவருகிறார். படம் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “உதய் உடன் பயணித்தது  மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் திரையில் அறிமுகப்படுத்த வேண்டியது நான் தான்.  ஆனால் அது நடக்கவில்லை. அவருடன் சைக்கோவில் பணிபுரிந்தேன், அவர் பணிவில் மிகச்சிறந்த நபர். அவருடன் வேலை பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அவர் அர்ப்பணிப்பான நபர். அவர் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டும். படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்  என்று தோன்றுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’கலகத் தலைவன்’ திரைப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

8656

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery