தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரித்த ‘எல்.கே.ஜி’ படம் மூலம் இயக்குநர் மற்றும் ஹீரோவாக அறிமுகமான ஆர்ஜே பாலாஜி, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கி நடித்தார். தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
ஹீரோவாக நடிப்பதோடு, தனது படத்தில் இயக்குநராகவும் பயணித்து வந்த ஆர்ஜே பாலாஜி, இப்படத்தின் மூலம் முதல் முறையாக நாயகனாக மட்டுமே பயணிக்கிறார். ஆம், இப்படத்தை ’ரெளத்திரம்’, ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’காஷ்மோரா’, ’ஜூங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
‘சிங்கப்பூர் சலூன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படமாகவும் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள தயாரிப்பு தரப்பு, படத்தில் நடிக்க கூடிய மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...