கொரியாவில் அறிமுகமாகி தற்போது உலகின் பல நாடுகளில் பரவலாக பயிற்சி அளிக்கப்பட்டு வரும் தற்காப்புக்கலை ‘டேக்வாண்டோ’. ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இந்த தற்காப்புக்கலை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தென் கொரியாவின் தேசிய விளையாட்டான இது ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் போட்டியிட்டார்.
வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், ஐசரி கே.கணேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத்தை சேர்ந்த சஞ்சய் சுப்ரியவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். ஐசரி கே.கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.
மேலும் டாக்டர். ஐசரி கே.கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராகவும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...