Latest News :

ரோபோக்களுடன் சண்டையிடும் ‘ஜெய்’!
Monday November-14 2022

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். ராகுல் பிலிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.

 

இதில் ஜெய்க்கு ஜோடியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். 

 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய அளவில் படமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் காட்சி மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

ஜானிலால் மற்றும் செவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எல்.வி.முத்து பின்னணி இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய, என்.எம்.மகேஷ் கலையை நிர்மாணித்துள்ளார். ராதிகா நடன காட்சிகளை வடிவமைக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

8663

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery