‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், தயாரிக்கும் படங்கள் அனைத்தும் வினர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சிலம்பரசன் நடிப்பில், ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு 50 நாட்களை கடந்து தற்போதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இளம் இயக்குநர்கள், பிரபல இயக்குநர்கள், இளம் நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், பிரபல நடிகர்கள் என அனைத்து தரப்பினரையும் வைத்து பல படம் தயாரித்து வரும் ஐசரி கே.கணேஷ், அப்படங்களின் அறிவிப்பை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டவர், அதனை தொடர்ந்து மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பை நேற்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளது.
இதுவரை 7 படங்களில் நடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹிப் ஹாப் ஆதியும், தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியானதுமே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...