பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் இருந்த நான்கு போட்டியாளர்களில் நடிகர் ஹரிஷும் ஒருவர். திரைப்படங்கள் சிலவற்றில் இவர் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பிரபலமடைந்துள்ளார். தற்போது ஹரிஷை அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அவரை செல்லக்குட்டி என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.
அந்த செல்லக்குட்டியை நேரில் அழைத்து பாராட்டிய பிரபல நடிகர் ஒருவர் பரிசு ஒன்றையும் அவருக்கு வழங்கியுள்ளார். அந்த பிர்பல நடிகர் சிம்பு தான்.
பிக் பாஸ் வீட்டில் திரையுலக பிரபலங்கள் போன்று உடை அணிந்து நடிக்குமாறு போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஹரிஷ் சிம்பு போல உடைந்து, சிம்புவாக நடித்து, அவரைப் போலவே பேசி அசத்தி விட்டார். ஹரிஷின் இந்த நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்ட நிலையில், சிம்புவையும் கவர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஹரிஷை நேரில் சந்தித்த சிம்பு அவருக்கு பரிசாக ஒரு புத்தகத்தை வழங்கியுள்ளார், அந்த புத்தகத்தில் தனது கையெத்தை போட்டிருப்பவர், ”உங்கள் இதயம் சந்தோசமாக துடிக்கட்டும் எப்போதும்.... உள்ளத்தால் மட்டுமே வெல்லுங்கள் எதையும்” என்ற வாக்கியத்தை எழுதி கொடுத்திருக்கிறார்.
இந்த புத்தகத்தை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹரிஷுக்கு, பல ரசிகர்களும் பரிசு பொருட்களை அனுப்பி வருகிறார்களாம்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...