Latest News :

’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சந்தானத்திற்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும் - இயக்குநர் மனோஜ் பீதா
Monday November-21 2022

மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. தெலுங்கு திரைப்படமான ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தை Labyrinth Films நிறுவனம் தயாரித்துள்ளது.

 

நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நடிகர் சந்தானம் படம் குறித்து பேசுகையில், “’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா- மகன்  கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை, அதை இந்த படத்தில் இயக்குநர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புதுவிதமாக இருக்கும். என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுகொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார், அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.  ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமான கதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜா உடைய இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய உழைப்புக்கு நன்றி கூறி ஆக வேண்டும், அவர்கள் தான் படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.” என்றார்.

 

நடிகை ரியா சுமன் பேசுகையில், “இது என்னுடைய மூன்றாவது தமிழ்படம். இந்த படத்தில் டாக்குமென்டரி இயக்குநராக நடித்துள்ளேன்.  வழக்கமான ஹீரோயின் போன்று இல்லாமல் , இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது, அது தான் இந்த படத்தை நான் ஒத்துகொள்ள காரணம். சினிமாத்துறையில் பல வருட காலம் பயணித்தாலும், இன்னும் புதிதாய் வந்த நடிகர் போல் சந்தானம் உழைப்பை கொடுக்கிறார். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.  சந்தானம் புகழ் காம்போ சூப்பராக இருக்கும்.  இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் மனோஜ் பீதா பேசுகையில், “இந்த படத்தில் சந்தானம் தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காமெடி செய்யவில்லை. ஒரு சீரியஸான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அவரும் புகழும் வரும் காட்சிகளில் அவர் வழக்கமான காமெடிகள் செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, படத்தின் கதாபத்திரமாக மாறியுள்ளார்.  இது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் கதையோட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு தங்களது முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது படத்தை  உங்களது கருத்தை கூறுங்கள். நன்றி.” என்றார்.

 

நடிகை ஆதிரா பேசுகையில், ”இது தான் சந்தானம் சாருடன் நான் நடிக்கும் முதல் படம். இதுவரை நீங்கள் சந்தானம் சாரை பார்த்த கதாபத்திரத்தில் இருந்து வேறுபட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.  இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.” என்றார்.

 

நடிகர் மதன்  பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், சந்தானம் சாருக்கு  நன்றி. நல்ல படத்தை நமது மொழிக்கு ஏற்றார் போல் ரீமேக் செய்வது ஆரோக்கியமான விஷயம். நமது மொழிக்கு ஏற்றார் போல் உருவாக்க, படக்குழு கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபத்திரத்தை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகர் புகழ் பேசுகையில், “சந்தானம் எனக்கு அண்ணன் போல, அவர் என்னுடைய வளர்ச்சியில் பெரிய பங்காற்றியுள்ளார்.  இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.  நானும், சந்தானம் அவர்களும் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான காம்போவாக வருவோம், அது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஹீரோயினுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

எடிட்டர் அஜய் பேசுகையில், “இந்த படம் ரீமேக் படம் மாதிரி இருக்காது. இந்த படத்தில் கடின உழைப்பை கொடுத்து ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்க முயற்சித்துள்ளோம்.  இந்த படத்தில் ஒரு புது சந்தானத்தை நீங்கள் பார்க்கலாம். வழக்கமாக சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் பல காட்சிகளில் அழ வைப்பார். இந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஜய் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

8674

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery