Latest News :

தயாரிப்பாளர் டாக்டர்.தனஞ்செயன் மகள் திருமணம்! - பிரபலங்கள் நேரில் வாழ்த்து
Tuesday November-22 2022

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர்.ஜி.தனஞ்செயன், விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘காக்கி’ ஆகிய படங்களை இன்பிடினிட்டி பிலிம் வெஞ்சரின் ஒரு பங்குதாரராக தயாரித்து வருகிறார். திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக பதவி வகித்து வருவதோடு, சிறந்த விமர்சகராக இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயனின் மகள் திருமணம் நவம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

தனஞ்செயனின் இரண்டு மகள்களும் அமெரிக்காவின் தங்களது மேல் படிப்பை முடித்ததோடு, அங்கேயே முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இரண்டு மகளது திருமணமும் இந்த வருடம் நவம்பர் - டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டது.

 

அதன்படி, தனஞ்செயனின் மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20 ஆம் தேதி அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள பி.எஸ்.பி கன்வென்ஷஸ் ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். 

 

Dhanajayan Daughter Marriage

 

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், T. சிவா, K.E. ஞானவேல்ராஜா, PL. தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்‌ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி. பிரதீப் உள்ளிட்ட பலர் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

அதேபோல், இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், ‘சிறுத்தை’ சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா ஃ லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்யநாதன், பாலஜி குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல இயக்குநர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

மேலும்,  விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, VJ ரம்யா, விச்சு உள்ளிட்ட  பல நடிகர், நடிகைகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

இவர்கள் மட்டுமல்லாது, ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாடகர்கள் என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூடி திருமண நிகழ்வில் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.

 

D'One அணியின் சுரேஷ் சந்திரா மற்றும் நாசர் தலைமையில் பிரபலங்கள் இந்த நிகழ்வுக்காக ஒருங்கிணைந்து கலந்து கொண்டனர்.

Related News

8678

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery