தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் பெண் வேடம் போட்ட புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘ஜுங்கா’ படத்திலும் வித்தியாசமான கெட்டப் போட்டிருக்கும் விஜய் சேதுபதியின், புதிய கெட்டப்புகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா பட இயக்குநர் இயக்கும் ‘ஜுங்கா’ படத்தை விஜய் சேதுபதியே சொந்தமாக மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் படமாக்கப்பட உள்ளதால், படக்குழுவினர் தற்போது பாரிஸில் முகாமிட்டுள்ளனர்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...