தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவுடன் கைகோர்த்திருக்கும் வெங்கட் பிரபு, இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் நாக சைதன்யாவின் 22 வது திரைப்படமாக உருவாகிறது.
இந்த நிலையில், ‘என்.சி 22’ என்ற தலைப்பில் அழைக்குப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘கஸ்டடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு 'A Venkat Prabhu Hunt' என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
'நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்' என்ற மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.
ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...