Latest News :

”உபசரிப்பில் அரசன்” - நடிகர் துரை சுதாகரை பாராட்டும் ‘பட்டத்து அரசன்’ படக்குழு
Thursday November-24 2022

’பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘நய்யாண்டி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக புதுமுக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் மிக முக்கியமான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார்.

 

‘களவாணி 2’ படத்தில் மென்மையான வில்லனாக நடித்து மிரட்டிய துரை சுதாகர், ’க.பெ ரணசிங்கம்’, ’டேனி’, ‘ஆன்டி இண்டியன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பாராட்டு பெற்றார்.

 

‘தப்பாட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் துரை சுதாகருக்கு தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், சிறிய வேடமாக இருந்தாலும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார். அதனால் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

அந்த வகையில், முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மற்றும் அதர்வா கூட்டணியில் ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் துரை சுதாகரின் வேடம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வந்திருப்பதாக இயக்குநர் சற்குணம் பேட்டிகளில் கூறி வருகிறார்.

 

Durai Sudhakar in Pattathu Arasan

 

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘பட்டத்து அரசன்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் படம் குறித்து பேசியதோடு, தஞ்சை மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்த போது, அந்த மாவட்டத்தை சேர்ந்த துரை சுதாகர், தங்களை உபசரித்த விதத்தை கூறி, அவரை வெகுவாக பாராட்டியதோடு உபசரிப்பில் துரை சுதாகர் தான் அரசன் என்றும் கூறியிருக்கிறார்கள்.

 

நாயகன் அதர்வா, ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி என படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர் சற்குணம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் துரை சுதாகரை பாராட்ட தவறவில்லை. மேலும், துரை சுதாகரை போல் யாராலும் உபசரிக்க முடியாது. தஞ்சை மாவட்டத்தில் படப்பிடிப்பு என்றால் நாம் தைரியமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். அனைத்தையும் துரை சுதாகர் பார்த்துக்கொள்வார். அவருடைய நல்ல மனதுக்கு அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வருவார், என்றும் கூறினார்கள்.

 

ராஜ்கிரண் போன்ற மூத்த நடிகருடன் இணைந்து நடித்தது குறித்து கூறிய துரை சுதாகர், “இயக்குநர் சற்குணம் சார் எனக்கு நல்ல வேடத்துடன், ராஜ்கிரண் சார் போன்ற மூத்த நடிகருடன் நடிக்கும் நல்ல வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். கபடி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’பட்டத்து அரசன்’ படத்தில் நல்ல குடும்ப கதை இருக்கிறது. இதுபோன்ற குடும்ப கதைகள் நிச்சயம் மக்களை எளிதில் சென்றடையும். அந்த வகையில், என்னுடைய வேடமும் மக்களை நிச்சயம் கவரும். ராஜ்கிரண் சாருடன் இணைந்து நடிக்கும் போது அவர் என் நடிப்பை பாராட்டும் போது விருது வாங்கியது போல் உணர்ந்தேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்.

 

Durai Sudhakar in Pattathu Arasan

 

பல துறைகளில் நான் பயணித்தாலும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து சினிமாவிலும் பயணிப்பேன். சிறிய வேடமாக இருந்தாலும், நல்ல வேடமாக இருந்தால் நிச்சயம் நான் நடிக்க தயராகவே இருக்கிறேன். ‘பட்டத்து அரசன்’ படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்கள் பற்றி ‘பட்டத்து அரசன்’ வெளியீட்டுக்கு பிறகு அறிவிப்பேன்.” என்றார்.

Related News

8689

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery