Latest News :

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் த்ரில்லர் படம் ‘ஃபைண்டர்’!
Tuesday November-29 2022

அரபி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் விஜயன் வெஞ்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஃபைண்டர்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் பரபரப்பான த்ரில்லர் படமான இப்படத்தை வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார்.

 

நடிகர் சார்லி மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி, பிரானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

சீட் நுணியில் ரசிகர்களை உட்கார வைக்கும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாக இப்படத்திற்கு பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ்குமரன் படத்தொகுப்பு செய்ய, சூர்ய பிரசாத் இசையமைக்கிறார். அஜய் சம்பந்தம் கலையை நிர்மாணிக்க, ஏ.ராஜா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

 

சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக முடிவு செய்யப்பட்டுள்ள இப்படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டார்கள்.

 

படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீட்டு மற்றும் பிற விவரங்கள் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8697

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery