தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமான ரோபோ சங்கர், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரோபோ சங்கர், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை விட “உலகநாயகனின் உறவு” என்று தன்னை அழைத்துக்கொள்வார்.
நடிகர் கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி மகிழ்ச்சியடையும் ரோபோ சங்கருக்கு நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து வந்த திடீர் அழைப்பு பற்றி தான் தற்போது ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசிக்கொண்டிருக்கிறது. அதுவும் குடும்பத்தோடு சென்று ரஜினியை அவர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ரோபோ சங்கரின் பிரியங்கா ‘கன்னி மாடம்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றதோடு, தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதேபோல், இவர்களது மகள் இந்திரஜா விஜயின் ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற வேடத்தில் நடித்து பிரபலமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
மனைவி, மகள் என குடும்பமாக சினிமாவில் பயணித்துக்கொண்டிருக்கும் நடிகர் ரோபோ சங்கர் - பிரியங்கா தம்பதிக்கு இன்று 22 வது திருமண நாள். இந்த நாளில் நடிகர் ரஜினிகாந்திடம் ஆசி பெற விரும்பி அவரிடம் ரோபோ சங்கர் நேரம் கேட்டிருக்கிறார். இதையடுத்து ரஜினிகாந்திடம் இருந்து அழைப்பு வர, குடும்பத்துடன் சென்று ஆழி பெற்றுள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரை வர வைத்து சந்தித்து, அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் மூலம் ரோபோ சங்கர் மட்டும் இன்றி அவரது ஒட்டு மொத்த குடும்பமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...