இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் அஞ்சன் சிவக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு
வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது. இதன் முக்கிய அம்சம் யாதெனில் இதில்
வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். கடந்த2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், லாஸ் வேகாஸில் 2016ம் ஆண்டில் நான்காவது இடமும், 2012ம் ஆண்டிலேயே இறுதி 8 போட்டியாளர்களில் இடம்பிடித்து சரித்திரம் படைத்துள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்த உதவியும், ஆதரவும் மிகவும் நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் நினைவு கூறத்தக்கது. இந்த ஆண்டும் நடைபெறு உள்ள போட்டிகளில் கலந்து கொள்வது சம்பந்தமாக, சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல இருக்கிறோம். இந்த ஆண்டும், அவர்கள் இந்திய நடன கலைஞர்கள் மற்றும் குழுவினர் உலக மேடையில் ஜொலிக்க உதவி புரிவார்கள் என்று திடமாக நம்புகிறோம்.
இந்த ஆண்டிற்கான உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களாக வீ கம்பெனி [V company - WWinners of Dance + TV RReality Show], எக்ஸ்1எக்ஸ் குழுவினர் [X1X Crew - FFinalists at India Banega Manch TV Reality Show], ஷோ ஸ்டாபெர்ஸ் குழுவினர் [Showstoppers Crew - Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017], டி பைரேட்ஸ் குழுவினர் [D Pirates [Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017] ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் அமைப்பு, உலக அரங்கில் நடனம், கலை, மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நடைபெறும் போட்டிகளில், இந்தியா முதல் இடம் பெறவேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு தன்னலமற்ற தன்முனைப்போடுச் செயல்பட்டு வருகிறது. மேலும், நடன கலைஞர்கள் போட்டி முடிந்து திரும்பியவுடன், சென்னை அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்து வரும் உதவிகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் இந்தியாவின் சார்பில் போட்டியில் பங்கேற்ற அத்தனை குழுக்களும், நடன கலைஞர்களும் இடம் பெறுவார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...