இணையத் தொடர் உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சுழல்’ தொடரை தொடர்ந்து இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, தங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இணையத் தொடர் ‘வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்திருக்கும் இத்தொடரில் வெலோனி என்ற கதாபாத்திரத்தில் அறிமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் லைலா மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன், ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மொத்தம் 8 எப்பிசோட்களை கொண்ட இந்த இணையத் தொடர் அமேசான் ஒடிடி தளத்தில் நாளை (டிசம்பர் 2) முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த தொடரின் சிறப்பு காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்கும் திரையிடப்பட்டது.
8 தொடரையும் பார்த்த பத்திரிகையாளர்கள், நேரம் போனதே தெரியவில்லை, மிக சுவாரஸ்யமாக அதே சமயம் புதுவிதமான லொக்கேஷன்களுடன் புதிய உணர்வை தரக்கூடிய விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, பாராட்டியுள்ளனர்.
மேலும், திரையுலகினருக்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில், 'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், '96' இயக்குநர் பிரேம் குமார், 'டான்' இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நடிகைகள் வசுந்தரா, கலை ராணி ஆகியோரும் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டனர்.
'வதந்தி' என்ற சொல்லின் அர்த்தம் போலவே இந்த சீரிஸ் ஒரு இளம் பெண் அதுவும் அழகான பெண் வெலோனியின் வதந்திகள் நிறைந்த உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லும். வெலோனியாக அறிமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா எப்படியாவது இந்த வழக்கின் மர்மத்தை உடைக்க படாதபாடுபடுகிறார்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' இந்தியா உள்பட 240 நாடுகளில் டிசம்பவர் 2ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள, கன்னடம் என பல மொழிகளிலும் ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...